தொழிலாளிக்கு கத்திக்குத்து
வேடசந்துார்: சீத்தமரம் நால்ரோட்டில் ஒட்டநாகம்பட்டியை சேர்ந்த முனியப்பன் 47, லாண்ட்ரி கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலை பார்க்கும் இரு தொழிலாளர்களை முடி வெட்ட மோகன் 43, சலுான் கடைக்கு அனுப்பினார். இரண்டு மணி நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. ஏன் இவ்வளவு தாமதம் கேட்க தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மோகன் சேவிங் கத்தியால் முனியப்பனின் கன்னத்தில் குத்தினார். வேடசந்துார் போலீசார் மோகனை தேடுகின்றனர்.