| ADDED : டிச 31, 2025 06:07 AM
திண்டுக்கல்: போக்சோ வழக்கில் தேனி மாவட்ட தொழிலாளி, தாய், தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சூர்யகுமார் 24. திண்டுக்கல்லில் மில் தொழிலாளியாக வேலை பார்த்தார். இவருக்கும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2024ல் சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக்கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.தொடர்ந்து சிறுமியை சொந்த ஊருக்கு அழைத்து சென்று வாழ்ந்து வந்தார். சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரில் சூர்ய குமார் , அவரின் தந்தை வசிமலை 47, தாய் மாரியம்மாள் 45, மூன்று பேரையும் போக்சோ வழக்கில் நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் மைதிலி வாதாடினார். மூவருக்கும் தலா 20 ஆண்டு சிறை, ரூ.5 அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா தீர்ப்பு கூறினார்.