உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடுக்கல் வாங்கலில் வாலிபர் கொலை

கொடுக்கல் வாங்கலில் வாலிபர் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி கார்த்திக் 21. எரியோட்டை சேர்ந்தவர் மண் அள்ளும் இயந்திர ஓட்டுநர் ஜெயபாண்டி 32 தற்போது திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இருவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டு பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஜெயபாண்டியின் வீட்டில் மீண்டும் பேச்சுவார்த்தை ஏற்பட்டு தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த ஜெயபாண்டி இரும்பு கம்பியால் கார்த்திக்கை தாக்கியதில் இறந்தார். நகர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ