உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகராட்சி, பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்புபவானிசாகர், கோபி அருகே மக்கள் போராட்டம்

நகராட்சி, பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்புபவானிசாகர், கோபி அருகே மக்கள் போராட்டம்

பவானிசாகர், பவானிசாகர் யூனியனுக்கு உட்பட்ட நல்லுார் மற்றும் நொச்சிகுட்டை ஊராட்சிகளை, புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மக்கள் நல்லுார் மற்றும் நொச்சிகுட்டை ஊராட்சி அலுவலகங்கள் முன்பு நேற்று காலை திரண்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சமாதானம் அடையாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும். எனவே நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தினர். ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கூடாது என, பெண்கள் தனித்தனியாக கோரிக்கை, மனுவை நல்லுார் ஊராட்சி தலைவரிடம் வழங்கினர்.அதில், 'எங்கள் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல், இணைப்பு நடந்தால், உண்ணாவிரதம், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம். தேர்தலிலும் யாருக்கும் ஓட்டளிக்க மாட்டோம்' என்று தெரிவித்துள்ளனர்.கோபி அருகே...கோபி அருகே அக்கரை கொடிவேரி பஞ்சாயத்தை, பெரிய கொடிவேரி டவுன் பஞ்சாயத்துடன் இணைப்பதை கண்டித்து, கொடிவேரி அணை பிரிவில், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்., தலைவர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை, கடத்துார் போலீசார் கைது செய்து விடுவித்தனர். இதுகுறித்து பஞ்., தலைவர் சிவக்குமார் (அ.தி.மு.க.,) கூறியதாவது:அக்கரை கொடிவேரி பஞ்சாயத்தை, பெரிய கொடிவேரி டவுன் பஞ்சாயத்துடன் இணைத்தால், நுாறு நாள் வேலை வாய்ப்பு பறிபோய், மக்கள் வறுமை நோக்கி செல்ல நேரிடும். தவிர வீட்டு வரி, குடிநீர் வரி உயரும். அரசாணையை ரத்து செய்து, அக்கரை கொடிவேரியை ஊராட்சியாகவே செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை