அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்தொடர் போராட்டம் நடத்துவது பற்றி அறிவிப்பு
அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்தொடர் போராட்டம் நடத்துவது பற்றி அறிவிப்புஈரோடு:ஈரோட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வெங்கிடு வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராஜராஜேஸ்வரி, வேலை அறிக்கை தாக்கல் செய்தார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இத்தீர்மானங்களை வலியுறுத்தி, காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கும் வகையில் ஊழியர்களின் விருப்புரிமை கேட்க வலியுறுத்தி வரும், 12ல் மாவட்ட கருவூலம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் வரும், 13ல் மாவட்ட தலைநகரில் நடக்கும் மறியலில் பங்கேற்பது, தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு வாழ்வூதியம் கோரி வரும், 19ல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது, வாழ்வூதியம் கோரி வரும் ஏப்., 17ல், மாவட்ட தலைநகரில் பேரணி செல்வது, காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கும்போது ஊழியர்களின் விருப்புரிமை கேட்க வலியுறுத்தி சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையர் அலுவலகம் முன் வரும் ஏப்., 24ல் ஆர்ப்பாட்டம் செய்வது, என முடிவு செய்தனர்.மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.