மேலும் செய்திகள்
விபத்துகள் 2 பேர் பலி
10-Feb-2025
சரக்கு ஆட்டோ மோதிவட மாநில தொழிலாளி பலி பெருந்துறை:சரக்கு ஆட்டோ மோதி, வட மாநில தொழிலாளி இறந்தார்.உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரை சேர்ந்தவர் ராம்லால், 43. இவர், பெருந்துறை, ஓலப்பாளையத்தில் தங்கியபடி, சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வீட்டுக்கு சைக்கிளில் சென்றார். ஓலப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ, சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம்லாலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10-Feb-2025