நாயை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்
யை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்அந்தியூர், :ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி, கூலிவலசை சேர்ந்தவர் நல்லசாமி, 30; திருப்பூரில் எலக்ட்ரிஷியன் ஆக வேலை செய்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் தலைவலி ஏற்பட்டதால், பெற்றோர் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர். நள்ளிரவில் வீட்டு முன் நாய் குறைத்துள்ளது. நாயை விரட்டச் சென்ற நல்லசாமி கால் தவறி விழுந்து மயங்கியுள்ளார். பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். நெஞ்சுவலி ஏற்பட்டதால் நல்லசாமி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.