மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
28-Dec-2024
போலீஸ் டைரி
08-Jan-2025
ஆட்டோ மோதி மகன் பலி தாய் உயிருக்கு போராட்டம்நம்பியூர்:நம்பியூர் அருகே, டூவீலர்- சரக்கு ஆட்டோ மோதிக்கொண்டதில், மகன் பலியானார். தாய் பலத்த காயமடைந்தார். புன்செய்புளியம்பட்டி, காயிதே மில்லத் வீதியை சேர்ந்தவர் லிங்கம்மாள், 50; கணவர் சின்னதுரை இறந்து விட்டார். இவரின் மகன் மர்காஸ் ராஜதுரை, 21; ஒரு மகள் உள்ளார். புளியம்பட்டியில் பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக ராஜதுரை பணிபுரிந்தார். மகள் திருமணத்துக்காக நம்பியூரில் வங்கியில் கடன் பெறுவது சம்பந்தமாக, லிங்கம்மாள் மற்றும் ராஜதுரை, நம்பியூருக்கு டூவீலரில் நேற்று மாலை சென்றனர். பொலவபாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ, டூவீலர் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் சம்பவ இடத்தில் ராஜதுரை பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு, லிங்கம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார். ஆட்டோ டிரைவரான வேமாண்டம்பாளையம், கொட்டக்காட்டு பாளையத்தை சேர்ந்த கோபிநாத், 28, மீது வரப் பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Dec-2024
08-Jan-2025