உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு கலை கல்லுாரியில்ஆடை வடிவமைப்பு போட்டி

கொங்கு கலை கல்லுாரியில்ஆடை வடிவமைப்பு போட்டி

கொங்கு கலை கல்லுாரியில்ஆடை வடிவமைப்பு போட்டிஈரோடு : ஈரோடு அருகே நஞ்சனாபுரம், கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை சார்பாக, பேஷன் ஜிங்காரோ--25 எனப்படும் தேசிய அளவில் பல்வேறு போட்டி நடந்தது. ஆடை வடிவமைப்பு துறை இணை பேராசிரியர் மஞ்சுளா வரவேற்றார். கல்லுாரி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் தேசிய அளவில், 30க்கு மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பேஸ் பெயிண்டிங், நெயில் ஆர்ட், ஆர்ட் பிரம் வேஸ்ட், பிரைடல் மேக்கப், பேஷன் ஷோ, குரூப் டான்ஸ் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளுக்கு நடுவர்களாக நடிகரும் மாடலுமான தீபக், ஹே-விமன்ஸ்வேர் உரிமையாளர் ஹரி நந்தினி சங்கீத், இத்துறையின் முன்னாள் மாணவர்களும் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக வழங்கப்பட்டது. போட்டியில் மிகவும் தனித்துவமான முறையில் ஆடை வடிவமைக்கப்பட்ட போட்டியளர்களுக்கு மிஸ்டர் ஜிங்காரோ மற்றும் மிஸ் ஜிங்காரோ தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பொது தேர்ச்சி கோப்பையை திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை