உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனாதி யாருமில்லை; அவனேதான் தந்தைமாவட்டத்தில் களை கட்டிய ரம்ஜான் வழிபாடு

அனாதி யாருமில்லை; அவனேதான் தந்தைமாவட்டத்தில் களை கட்டிய ரம்ஜான் வழிபாடு

'அனாதி யாருமில்லை; அவனேதான் தந்தை'மாவட்டத்தில் களை கட்டிய ரம்ஜான் வழிபாடுஈரோடு, ஏப் 1ரம்ஜான் திருநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில், 14 இடங்களில் நேற்று ஊர்வலம் மற்றும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.முஸ்லீம் மக்கள் ரமலான் நோன்பை கடந்த பிப்.,மாதம், 28ம் தேதி மாலை துவங்கி மார்ச், 30ம் தேதி மாலை வரை தொடர்ந்தனர். பிறை தெரிந்ததை தொடர்ந்து ரம்ஜான் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு வ.உ.சி., பூங்கா ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். மாநகராட்சி பெரியார் நகரில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். ரம்ஜான் திருநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 14 இடங்களில் ஊர்வலம், ஏழு இடங்களில் சிறப்பு தொழுகை, 100 பள்ளி வாசல்களில் தொழுகை நடந்தது. * சத்தியமங்கலத்தில் ஜமாத் தலைவர் நதி முல்லாகான் தலைமையில், மணிக்கூண்டு அருகில் பெரிய பள்ளிவாசல் பகுதியிலிருந்து கோட்டுவீராம்பாளையம் ஈத்கா மைதானம் வரை,௩,௦௦௦க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகை நடத்தினர்.* ஜம்பை சுன்னத் ஜமாத் மசூதி, பவானி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சுன்னத் ஜமாத் மசூதியில் நுாற்றுக்கணக்கானோர் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.* கோபி முத்துசா வீதி உள்ள ஈதுகா பள்ளிவாசல், கோபி போக்குவரத்து சிக்னல் அருகேயுள்ள பள்ளிவாசலிலும் திரளான முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.* அந்தியூரில் பர்கூர் சாலையில் உள்ள பள்ளிவாசலில் இருந்து, ஆதிரெட்டியூர் வழியில் உள்ள ஈதுகா மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர் டாக்டர் சாகுல் ஹமீது தலைமையில் தொழுகை நடந்தது. இதில் பள்ளிவாசல் செயலாளர் ஷானவாஸ் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி