உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று அமைச்சர்கள் பங்கேற்கும்செயல் வீரர்கள் கூட்டம் ஏற்பாடு

இன்று அமைச்சர்கள் பங்கேற்கும்செயல் வீரர்கள் கூட்டம் ஏற்பாடு

இன்று அமைச்சர்கள் பங்கேற்கும்செயல் வீரர்கள் கூட்டம் ஏற்பாடுஈரோடு,: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் இன்று, வேட்பு மனுத்தாக்கலுக்கு பின், அமைச்சர்கள் பிரசாரம், செயல் வீரர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.இதுபற்றி தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு கிழக்கில், 2023ல் நடந்த இடைத்தேர்தலில், வேட்பாளர் அறிவித்ததும் மனு தாக்கலுக்கு முன்பே, அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்ட செயலாளர்கள் ஈரோட்டில் குவிந்தனர். ஒவ்வொரு பகுதியாக தங்கி தேர்தல் பணிகள், கவனிப்பு, வாக்காளர்களுக்கு சாப்பாடு வழங்கினர். இம்முறை அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியை தவிர்த்துள்ளதால், அனைத்து அமைச்சர்களும் நாட்கணக்கில் தங்கி பணி செய்ய வேண்டாம். உள்ளூர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் பிரசாரம் நடக்கட்டும். கடந்த முறை போல தேர்தல் பணிகளை அமைச்சர்கள் வேலு, நேரு ஒருங்கிணைக்கட்டும். அவர்களும் சில நாட்கள் வந்து சென்றால் போதும். மற்ற அமைச்சர்கள் ஓரிரு நாள் பிரசாரம் செய்தால் போதும் என்றும் முடிவு செய்யப்ப்டுள்ளது. இன்று திமுக வேட்பாளர் மனுத்தாக்கல் முடிந்ததும், அமைச்சர்கள் முத்துசாமி, வேலு, செந்தில்பாலாஜி பங்கேற்கும் செயல் வீரர்கள் கூட்டம் பணிமனையில் நடக்கவுள்ளது. அதன் பிறகு பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ