பள்ளியில் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு
பள்ளியில் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்புஈரோடு, :ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் ஆந்தை ஒன்று அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தது. இதை பார்த்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வந்து, அரை மணி நேரம் போராடி, ஆந்தையை லாவகமாக பிடித்தனர். பின், கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள வனத்துறையினரிடம் ஆந்தையை ஒப்படைத்தனர்.