கலெக்டர் வருகையால் பலன்முடிவடைந்த சிறு பாலப்பணி
கலெக்டர் வருகையால் பலன்முடிவடைந்த சிறு பாலப்பணிஅந்தியூர்:அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இருந்து பூக்கடை முக்கு வரை, மழை காலங்களில், சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் சேர்ந்து சாலையில் முழங்கால் அளவு தேங்குவது வழக்கம். இதற்கு நிரந்த தீர்வு காணும் வகையில், பல லட்சம் ரூபாய் செலவில், சிறு பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கினர். இதனால் அனைத்து வாகனங்களும் ஒரே பாதையில் சென்று வந்தன. அந்தியூருக்கு கலெக்டர் வருவதை அறிந்து, பணிகளை விரைவாக முடித்தனர். தற்போது இருபுறமும் வாகனங்கள் மீண்டும் செல்ல தொடங்கியுள்ளன.