உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., சார்பில் இன்று, நாளைகூட்டம்; அமைச்சர் அழைப்பு

தி.மு.க., சார்பில் இன்று, நாளைகூட்டம்; அமைச்சர் அழைப்பு

தி.மு.க., சார்பில் இன்று, நாளைகூட்டம்; அமைச்சர் அழைப்புகாங்கேயம்:திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சருமான சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை:மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியை திணிக்கும் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதி பகிர்விலும் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில், திருப்பூர் கிழக்கு தி.மு.க., மாவட்ட பகுதிகளில் இன்று (மார்ச் 6) வெள்ளகோவில், நாளை மூலனுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கலந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு விழிபுணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடு. வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்தும், மக்களும் கூட்டத்தில் பங்கெடுத்து கொள்ளும் வகையில், இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை