உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரியை முந்த முயன்ற போதுடூவீலர்கள் மோதி வாலிபர் பலி

லாரியை முந்த முயன்ற போதுடூவீலர்கள் மோதி வாலிபர் பலி

லாரியை முந்த முயன்ற போதுடூவீலர்கள் மோதி வாலிபர் பலிசென்னிமலை:சென்னிமலை அடுத்த மேலப்பாளையம் சரவணா நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் நவீன்குமார், 20, கட்டிட தொழிலாளி. ஹீரோ ஹோண்டா பைக்கில், சென்னிமலை-காங்கேயம் மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் அருகில் நேற்றிரவு, காங்கேயம் நோக்கி சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது எதிரில் சுசூகி மேக்ஸ்-100 பைக்கில், சென்னிமலை யூனியன் திப்பம்பாளையம், வெங்கமேடு கவியரசு, 20, முருங்கத்தொழுவு ஊராட்சி தண்ணீர் பந்தல் பகுதி அஸ்வின், 19, வந்தனர். இந்த பைக் மீது மோதியதில், நவீன்குமார் நிலை தடுமாறி லாரி சக்கரத்தில் விழுந்ததில் உடல் நசுங்கி பலியானார். மற்ற இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த முத்து, 60, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை