அண்ணாதுரை சைக்கிள் போட்டியில் 170 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ஈரோடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. ஈரோடு கனிராவுத்தர்குளத்தில் தொடங்கிய போட்டியை, வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி, 13 வயது, 15 வயது, 17 வயது பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது. மொத்தம், 170 பேர் பங்கேற்றனர்.இதில், 13 வயது மாணவர் பிரிவில் சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளி கிருத்திக் வாசன் முதலிடம், கீதாஞ்சலி பள்ளி அபிமன்யு இரண்டாமிடம், ஜவுளி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஜீவா மூன்றாமிடம் இடம் பிடித்தனர். இதே பிரிவில் மாணவியருக்கான போட்டியில் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளி சன்மிதா முதலிடம், ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிரனிதா இரண்டாமிடம், ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பல்லவி மூன்றாமிடம் பிடித்தனர்.15 வயது மாணவர்கள் பிரிவில், பவானி மதர்ஸ் மெட்ரிக் சுகுந்தன் சுபி முதலிடம், ஈரோடு எம்.வி.எம்., பள்ளி கிரிதர்சன் இரண்டாமிடம், ஈரோடு இந்து கல்வி நிலைய பள்ளி நித்தின் மூன்றாமிடம்; மாணவியர் பிரிவில் அமிர்த வித்யாலயா பள்ளி கிருத்திகா முதலிடம், ஈரோடு எம்.ஆர்.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி யுவஸ்ரீ இரண்டாமிடம், ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிகா மூன்றாமிடம் பிடித்தனர்.17 வயது மாணவர்கள் பிரிவில் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கோகுலகிருஷ்ணன் முதலிடம், திண்டல் கீதாஞ்சலி சி.பி.எஸ்.இ., பள்ளி விசாகன் இரண்டாமிடம், சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புவனேந்தர் மூன்றாமிடம்; மாணவிகள் பிரிவில் சுவேதா, பிரியா, காவியா லட்சுமி முதல் மூன்று இடங்களை பிடித்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.நான்கு முதல் பத்தாவது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா, 250 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்தார்.