மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ
27-Nov-2024
கொடுமுடி ராணுவ ஊழியர் உள்பட 3 பேர் மீது போக்சோஈரோடு, நவ. 29-கொடுமுடி, தாமரைபாளையத்தை சேர்ந்த, பழனி மகன் யுவராஜ், 33; நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாம் பிட்டர். திருமணமாகி மனைவியை பிரிந்த நிலையில், கொடுமுடியை சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அறச்சலுார் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோவில், யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.* வெள்ளிதிருப்பூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் தமிழரசன், 24; பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். குழந்தைகள் நல குழுவினர் புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.* ஈங்கூரை சேர்ந்தவர் தனசூர்யா. ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் பழகியுள்ளார். குளிப்பதை வீடியோ எடுத்து தனசூர்யாவுக்கு சிறுமி அனுப்பியுள்ளார். இதை சமூக வலைதளங்களில் தனசூர்யா பரப்பியுள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, பெருந்துறை போலீசார், போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27-Nov-2024