உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: வங்கியாளர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில், ஈரோடு, எஸ்.பி.ஐ., வங்கி தலைமை கிளை முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேலுசாமி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ரத்னா முன்னிலை வகித்தனர். வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த மற்றும் தற்கா-லிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி