| ADDED : ஆக 23, 2024 01:15 AM
ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் ஈரோடு, ஆக. 23-ராகவேந்திர சுவாமி, ௩53ம் ஆண்டு ஆராதனையையொட்டி, ஈரோடு காவிரிக்கரை ஸ்ரீராகவேந்திரர் மற்றும் ஈரோடு அக்ரஹார வீதி ஸ்ரீராகவேந்திரர் கோவில்களில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காவிரிக்கரை ராகவேந்திரா, ஆஞ்சநேயா கோவிலில் பூர்வ ஆராதனை, நிர்மால்ய விசர்ஜனம், வேதபாராயணம், கனகாபிஷேகம், பல்லக்கு, ரத உற்சவங்கள், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஈரோடு அக்ரஹார வீதி பாதராஜ மடத்தில் ஆராதனையை தொடர்ந்து, மதியம் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம், மாலையில் திருத்தேரில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.