தள்ளுவண்டி மாயம் வியாபாரி அதிர்ச்சி
தள்ளுவண்டி மாயம்வியாபாரி அதிர்ச்சிதாராபுரம், ஆக. 25-தாராபுரம், என்.என்.பேட்டை வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 58; தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். கடந்த, 18ம் தேதி இரவு, மழை பெய்ததால், அவசரத்தில் வண்டியின் இருசக்கரங்களை சேர்த்து பூட்டாமல் சென்று விட்டார். மறுநாள் காலை பார்த்தபோது வண்டியை காணவில்லை. தாராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடியும் வாகனம் கிடைக்கவில்லை. தள்ளுவண்டி மாயமானதால், தினசரி பைனான்ஸ்காரருக்கு பணம் செலுத்த முடியாமல், ஆறுமுகத்தின் குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது. மாற்று வாகனத்துக்கு அரசு தரப்பில் ஏதாவது உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்துள்ளார்.