மேலும் செய்திகள்
டிராலியில் சாய்ந்தபடி தொழிலாளி மரணம்
20-Dec-2024
ஈரோடு ஈரோடு, கஸ்பாபேட்டையை சேர்ந்த முருகேசன் மகன் விஜய், 29, கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். ஈரோட்டில் இ.வி.என்., சாலையில், பெஸ்ட் மருத்துவமனை முன்புற சாலையை, ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் பைக்கில், கடந்த, 4ம் தேதி மதியம் கவனக்குறைவாக கடக்க முற்பட்டார். அப்போது எதிரே நடந்து சாலையை கடந்த நத்தகாடையூர், பழையகோட்டையை சேர்ந்த சுப்பிரமணி, 65; பர்வதம், 60, தம்பதி மீது மோதினார். இதில் சுப்பிரமணிக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. பர்வதத்துக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேசமயம் விபத்தில் தடுமாறி விழுந்த விஜய்யின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து ஈரோடு ஜி.ஹெச்., போலீசார் விசாரிக்கின்றனர்.ஈரோடு ஈரோடு, வீரப்பன்சத்திரம், அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி, 55; இவரின் மனைவி பூமதி, 45; சூதாட்டத்தில் மனைவியின் சொத்துக்களை விற்று அழித்து விட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மது குடிக்க பணம் இல்லாததால் பைக்கை அடமானம் வைத்துள்ளார். பைக்கை மீட்டு தருமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். மறுப்பு தெரிவித்த பூமதியை, கைகளால் சரமாரியாக அடித்துள்ளார். கட்டில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றார். அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் பூமதியை மீட்டனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில், பூமதி அளித்த புகாரின்படி, எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான நல்லசாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
20-Dec-2024