உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் நில ஏலத்தைமுறையாக நடத்த மனு

கோவில் நில ஏலத்தைமுறையாக நடத்த மனு

கோவில் நில ஏலத்தைமுறையாக நடத்த மனுஈரோடு, இந்து முன்னணி பெருந்துறை ஒன்றியம் சார்பில், செயலாளர் சதீஸ்குமார் தலைமையிலானவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:துடுப்பதி பஞ்.,ல் பிரசன்ன விநாயகருக்கு சொந்தமாக புஞ்சை நிலம், 5.77 ஏக்கர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சில நாட்களுக்கு முன் இவ்விடத்தை பொது ஏலத்தில் விடுவதாக அறிவித்து, 3ல் ஏலம் நடந்தது. நாங்களும் ஏலத்தில் பங்கேற்றோம். ஏலத்தை நடத்தாமல் சின்னசாமி, கோபால் ஆகியோருக்கு பொது ஏலம் விடப்பட்டதாக அறநிலையத்துறை ஆய்வாளர் ஸ்ரீகுகன், பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து பொது ஏலம் விட கேட்டபோது மறுத்துவிட்டனர். கலெக்டர் விசாரித்து, ஏலத்தை ரத்து செய்து முறையாக நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை