மேலும் செய்திகள்
ரூ.1.90 கோடிக்கு கொப்பரை ஏலம்
22-Dec-2024
சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் சத்தியமங்கலம், :ஈ.வெ.ரா.,வை இழிவாக பேசிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில், சத்தியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், விடுதலை சிறுத்தை கட்சிகள், ஆதி தமிழர் பேரவை, திராவிடர் கழகம், இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.*கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 45 ரூபாய், நேந்திரன், 61 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 650, தேன்வாழை மற்றும் ரஸ்த்தாளி, தலா 670 ரூபாய், செவ்வாழை, 1,250, பச்சைநாடான், 480, ரொபஸ்டா, 580, மொந்தன், 330 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,540 வாழைத்தார்களும், 14.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் பத்து ரூபாய் முதல் 33 ரூபாய் வரை, 13 ஆயிரத்து, 540 தேங்காய்கள், 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 9,854 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 37.17 ரூபாய் முதல், 56.91 ரூபாய் வரை, 3,052 கிலோ தேங்காய், 1.௫௩ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 2,487 மூட்டைகளில், ௧.௦௨ லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 134.20 ரூபாய் முதல் 154.16 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 6௭ ரூபாய் முதல் 146.17 ரூபாய் வரை, ௧.௪௦ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
22-Dec-2024