உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம நிர்வாக அலுவலர்கள்கோபியில் மாதாந்திர கூட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள்கோபியில் மாதாந்திர கூட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள்கோபியில் மாதாந்திர கூட்டம்கோபி:தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கோபி வட்டக்கிளையின் மாதாந்திர கூட்டம், வட்ட தலைவர் ஜெயந்தன் தலைமையில் நடந்தது.செயலாளர் சரவணக்குமார், துணைத் தலைவர் நடராஜூ உட்பட பலர் பங்கேற்றனர். எந்த ஒரு அறிக்கை வேண்டும் என்றாலும், கால அவகாசம் கொடுக்க வேண்டும். கால அவகாசமின்றி அவசரமாக கொடுக்கப்படும் அறிக்கையில், தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க வேண்டும். வருவாய் தீர்வாய தொகையை, அனைத்து வி.ஏ.ஓ.,க்களுக்கும் உடனே வழங்க வேண்டும்.புலத்தணிக்கைக்கு வரும் மேல் அதிகாரிகள், முறையாக முந்தைய நாளில் தகவல் தெரிவித்தால், கிராம கணக்குகள் தயார் நிலையில் வைக்கஏதுவாக இருக்கும் என தீர்மானம் நிறைவேற்றி, அதன் நகலை கோபி தாசில்தார் சரவணனிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி