உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காளை மாட்டு சிலையைஅடக்கிய போதை ஆசாமி

காளை மாட்டு சிலையைஅடக்கிய போதை ஆசாமி

காளை மாட்டு சிலையை'அடக்கிய' போதை ஆசாமிஈரோடு,:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, காளை மாட்டு சிலை உள்ளது. நேற்று மதியம், 12:00 மணியளவில், 60 வயது மதிக்கதக்க ஆசாமி, சிலை பகுதிக்கு வந்தார். போதையில் இருந்தவர், ஒரு கயிறை காளை மாட்டின் கழுத்தில் கட்டினார். பிறகு அதை அடக்குவது போல் சைகை செய்தார். அங்கு நின்றபடி எம்.ஜி.ஆர்., பட பாடல்களை பாடவே, மக்களும் வேடிக்கை பார்க்க தொடங்கினர். இதனால் பாடுவதும், சிலையை அடக்க முயல்வதுமாக சேட்டைகளை தொடர்ந்தார். ஒரு வழியாக, 20 நிமிடங்களுக்கு பின் தானாகவே சென்றார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக காளை மாட்டு சிலை பகுதி உள்ளது. இங்கு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது அவசியம். இதற்காக இப்பகுதியில் போலீஸ் போஸ்டும் உள்ளது. போலீசாரும் இதில் நின்றபடி பாதுகாப்பு, கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக, போலீசார் இங்கு பணியில் இருப்பதில்லை என்று, அப்பகுதி கடைக்காரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி