விவசாயி வீட்டில் திருட்டு
விவசாயி வீட்டில் திருட்டுகாங்கேயம்:காங்கேயத்தை அடுத்த ஊதியூர் அருகே தாயம்பாளையம், ராசிபாளையத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம், 65; இவருடைய தங்கை கமலம், 50; இருவரும் நேற்று முன்தினம் மதியம் காங்கேயத்திலுள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்றனர். மதியம் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் கதவு மற்றும் பீரோ திறந்து கிடந்தது. இரண்டேகால் பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி ஊதியூர் போலீசார், பட்டப்பகலில் கைவரிசை காட்டிய ஆசாமிகளை, தேடி வருகின்றனர்.