உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / -சாலையோர பள்ளத்தில் பாய்ந்த டவுன் பஸ்

-சாலையோர பள்ளத்தில் பாய்ந்த டவுன் பஸ்

-சாலையோர பள்ளத்தில் பாய்ந்த டவுன் பஸ்புன்செய்புளியம்பட்டிபவானிசாகரில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தியமங்கலம் நோக்கி கெஞ்சனுார் வழியாக, 1ம் நெம்பர் அரசு டவுன் பஸ் நேற்று மாலை சென்றது. ஓட்டுனர் பிரகாஷ், 34, ஓட்டினார். சத்தியமங்கலம் சாலை தயிர் பள்ளம் பகுதியில் நேற்று மாலை வீசிய காற்றால் மரம் முறிந்து விழுந்தது. இதனால் மாற்றுப்பாதையில் பஸ் சென்றது. வெள்ளியம்பாளையம் கொக்கரக்குண்டி சாலையில் ஜெ.ஜெ.நகர் அருகே சென்றபோது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. பஸ் முன்புறத்தில் அமர்ந்திருந்த மூன்று பயணிகள் லேசான காயம் அடைந்தனர். கிரேன் உதவியுடன் பஸ் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி