மேலும் செய்திகள்
கொலை முயற்சி வழக்கு இருவருக்கு குண்டாஸ்
03-Apr-2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் சிறையில் அடைப்புஈரோடு:கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி, கைதான மேற்கு வங்க மாநில வாலிபர் உட்பட இருவர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில், கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக கடந்த மாதம், 9ல் மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் பகுதியை சேர்ந்த அப்துல் பாரக் பிஸ்வாஷ், 28, ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகரை சேர்ந்த ஜீவானந்தம், 21, ஆகிய இருவரை ஈரோடு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி தலைமையிலான போலீசார் கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து, 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் இருவரையும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சுஜாதா வாயிலாக கலெக்டருக்கு பரிந்துரைத்தார். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கோபி சிறையில் உள்ள இருவரையும், மதுவிலக்கு போலீசார் பாதுகாப்புடன், கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
03-Apr-2025