உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேர் நிலை நிறுத்தம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேர் நிலை நிறுத்தம்

அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவில் தேர் நிலை நிறுத்தம்அந்தியூர்:அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டு தீ மிதி விழாவை தொடர்ந்து, 11ம் தேதி தேரோட்டம் தொடங்கியது. முதல் நாளில் தேர்வீதி, பர்கூர் ரோடு, ராஜவீதி வழியாக நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். நேற்று மாலை ராஜவீதியிலிருந்து இழுத்து செல்லப்பட்ட தேர், தேர்வீதியில் பாலதண்டா யுதபாணி கோவிலுக்கு எதிரில் உள்ள தேர்முட்டி அருகே நிலை நிறுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் பத்ரகாளி கோஷம் எழுப்பி பரவசமடைந்தனர். தொடர்ந்து, தேரில் இருந்த உற்சவர் சிலை, பத்ரகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. குண்டம், தேரோட்டம் முடிந்து பத்ரகாளியம்மன் ஓய்வெடுக்கும் நிலையில், நேற்றிரவு ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி