மேலும் செய்திகள்
சொத்து வரி மறு சீராய்வு 2 மாதமாக நிறுத்திவைப்பு
06-Feb-2025
ஈரோடு: மாநகராட்சி பகுதியில் சொத்து வரியை பாதியாக குறைக்கக்-கோரி, கட்டட சாவி, பத்திர நகலுடன் வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்து, ஈரோடு வரி செலுத்-துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் பாரதி, சண்முகசுந்தரம் போன்றோர் கூறியதாவது:கோவை, திருச்சி மாநகராட்சியைவிட, 2 மடங்கு அதிகமாக ஈரோட்டில் சொத்து வரி உள்ளது. இதை பாதியாக குறைக்க வேண்டும். பழைய கட்டடங்களுக்கு வணிகம், குடியிருப்பு இணைந்திருந்தால், அக்கட்டடங்களுக்கு ஏற்கனவே பயன்பாட்-டுக்கு ஏற்ப வரி உயர்வு செய்துள்ள நிலையில், அதை மாற்றி வரி உயர்வு செய்வதை கைவிட வேண்டும். குப்பை வரியை சொத்து வரியுடன் இணைத்து, ரசீது போடுவதை கைவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.
06-Feb-2025