உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சாகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெருந்துறை: பெருந்துறை சாகர் இண்டர்நேசனல் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் சௌந்திரராசன் துவக்கி வைத்தார். பள்ளிக்கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஷீஜா வரவேற்றார்.தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கலை அறிவியல் மற்றும் கணிணி அறிவியல் சார்ந்த படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் பழங்கால கைவினை பொருட்கள், உணவு பொருள், விளையாட்டு பொருள், பழமை-யான கோவில் போன்ற நம்நாட்டின் பண்பாடு மற்றும் கலாசா-ரத்தை நினைவு கூறும் வகையில் இருந்தது. நவீன விவசாயம், நவீன தானியங்கி பண இயந்திரம், கழிவு-களை பிரிக்கும் இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு ரோபோ, இணையதள இயந்திர பயன்பாடு போன்றவற்றை மாணவர்கள் திறம்பட படைத்திருந்தனர். தாளாளர் சௌந்திரராசன், மாணவர்-களை பாராட்டி, சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ