உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண்ணை கொன்ற யானை

பெண்ணை கொன்ற யானை

சத்தியமங்கலம்:தாளவாடி அருகேயுள்ள ஜோரா ஒசூரை சேர்ந்தவர் சுந்தரி, 45; நேற்று முன் தினம் மாலை அதே பகுதியில் வனப்பகுதியை ஒட்டி மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனத்தில் இருந்து வந்த ஒற்றை யானை சுந்தரியை துரத்தி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாம்ராஜ் நகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார். ஜீரகள்ளி வனத்துறையினர், தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி