லிப்டில் சிக்கிய சிறுமி மீட்பு
லிப்டில் சிக்கிய சிறுமி மீட்புஈரோடு, :ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில், வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நான்காவது தளத்தில் கூலி தொழிலாளி ராமச்சந்திரன் வசிக்கிறார். இவரின் மகள் ரியாசினி, 10; நேற்று மாலை, 5:00 மணியளவில் லிப்ட்டில் தரை தளத்துக்கு வந்தார். அப்போது தரை தளத்துக்கும்-முதல் தளத்துக்கும் இடையே லிப்ட் திடீரென நின்றது. மின்சாரமும் துண்டிக்கவில்லை. லிப்ட் வராததால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் பார்த்தபோது, சிறுமி சிக்கி கொண்டு தவித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். குடியிருப்புக்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், ஐந்து நிமிடங்களில் சிறுமியை மீட்டனர். இச்சிறுமி ஏற்கனவே இதேபோல் லிப்டில் சென்ற போது நடுவில் சிக்கி கொண்டார். அப்போது லிப்ட் ஆப்ரேட்டர் மீட்டுள்ளனர். தற்போது லிப்ட் செயல்படாமல் சிக்கி கொண்டதும் தெரிய வந்தது.