சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பேரணிசத்தியமங்கலம்,:தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பாக தாளவாடியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாளவாடி தாசில்தார் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். ஹெல்மெட் அணிவது அவசியம், மொபைல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, பள்ளி மாணவ, மாணவியர் பேரணியாக சென்றனர். தாளவாடி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கிரிதரன், அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.