உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டுச்சாவடிகளை அடைந்த இ.வி.எம்.,கள்

ஓட்டுச்சாவடிகளை அடைந்த இ.வி.எம்.,கள்

ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக, மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை ஓட்டுச்சாவடிகளுக்கு நேற்று எடுத்து செல்லப்பட்டன.தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. 24 மண்டல அலுவலர்கள் தலைமையில், தலா ஒரு உதவி மண்டல அலுவலர், ஒரு உதவியாளர் என பிரித்து, இயந்திரங்களை பெற்றனர்.ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் ஒரு ஜீப், ஒரு லாரி வழங்கப்பட்டது. அந்த லாரியில், 8 முதல், 12 ஓட்டுச்சாவடிகளுக்கான இயந்திரங்கள், 85 வகையான ஓட்டுச்சாவடி பயன்பாட்டு பொருட்கள், வாக்காளர் பட்டியல் விபரங்கள் போன்றவற்றை சேகரித்து பெற்று சென்றனர்.அந்த வாகனத்தில் தலா, 8 துணை ராணுவத்தினர், 1 துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீஸ் பயணித்தனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று, அங்குள்ள தலைமை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒப்படைத்தனர்.அதேநேரம், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் உட்பட நால்வரும், 1,200 ஓட்டுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிக்கு ஐந்து அலுவலர்கள் என பயிற்சி பெற்று, நேற்று மதியம் முதல் மாலைக்குள் பொறுப்பேற்றனர்.இப்பணியில், 1,194 பேர் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ