உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா

பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா

பெருந்துறை:பெருந்துறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக, 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா பெருந்துறையில் நடந்தது. ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் அனைவருக்கும், வளைகாப்பு நடத்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நிகழ்வில் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் சூர்யா வரவேற்றார். பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பேபி, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பால் சின்னசாமி, பெருந்துறை டவுன் பஞ்., தலைவர் ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் நகர செயலாளர் அகரம் மூர்த்தி, டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ