யூனியன் அலுவலககட்டடத்துக்கு பூமி பூஜை
யூனியன் அலுவலககட்டடத்துக்கு பூமி பூஜைஅந்தியூர்:அந்தியூர் யூனியன் அலுவலக வளாகத்தில், புதிய யூனியன் அலுவலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ், புது யூனியன் அலுவலகம் கட்ட, ஐந்து கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கட்டட பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அந்தியூர் பேரூர் செயலர் காளிதாஸ், மாவட்ட ஐடி விங்க் துணை அமைப்பாளர் நாகராஜ், பி.டி.ஓ.,க்கள் அமுதா, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.