மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து கல்லுாரி மாணவர் பலி
14-Feb-2025
மின்சாரம் தாக்கிகல்லுாரி மாணவர் பலிபுன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகே, வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தியாகமூர்த்தி, 20. கோவை தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காரமடை தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லுாரிக்கு விடுமுறை என்பதால், தனது நண்பரான பரிசாபாளையத்தை சேர்ந்த லோகித் என்பவரை பார்க்க வந்துள்ளார். இருவரும் பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே, சிறுநீர் கழிக்க சென்ற போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது.இதை கவனிக்காத நிலையில், தியாகமூர்த்தியின் கையில் மின் கம்பி பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Feb-2025