உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெயிலால் சரிந்தது உற்பத்திபட்டு விவசாயிகள் கவலை

வெயிலால் சரிந்தது உற்பத்திபட்டு விவசாயிகள் கவலை

வெயிலால் சரிந்தது உற்பத்திபட்டு விவசாயிகள் கவலைஈரோடு:கடும் வெயிலால் பட்டுப்புழுக்கள் மடிந்தும், பட்டுக்கூடு அவிந்தது போலவும் மாறி உற்பத்தி குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுபற்றி தமிழ்நாடு பட்டு விவசாயிகள் சங்க தலைவர் ராஜகோபால் கூறியதாவது: ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில், 10,000 ஏக்கர் வரை பட்டுப்புழு உற்பத்தியாகிறது. பிற மாவட்டங்களைவிட ஈரோடு மாவட்ட பட்டுக்கூடு தரமானவை. இதனால் கூடுதல் விலை கிடைக்கிறது.தற்போது, 100 டிகிரிக்கு மேல் வெப்பம் உள்ளதால், பட்டுப்புழுக்கள் வெப்பத்தை தாங்கி வளர முடியவில்லை. மல்பெரி செடிகளுக்கும் போதிய தண்ணீர் வழங்கினாலும், இலை காய்ந்து விடுகிறது. இதனால் பட்டுப்புழுக்கள் தேவையான மல்பெரி இலையை உண்ணாமல் இறக்கின்றன. உற்பத்தியாகும் பட்டுக்கூடு (கக்கூன்) அவிந்தது போல மாறுவதால் தரம் குறைந்து கழிவாகிறது.இதனால் உற்பத்தி, 40 சதவீதம் வரை குறைகிறது. தற்போது தர்மபுரியில் ஒரு கிலோ பட்டுக்கூடு, 750 முதல், 780 ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால், 40 சதவீத விளைச்சல் இல்லாததால், பட்டுக்கூடுக்கு நல்ல விலை இருந்தும் விவசாயிக்கு லாபம் இல்லாத நிலையே நீடிக்கிறது. வரும் ஜூன் இறுதி வரை வெயில் வாட்டும் என்பதால், பட்டு உற்பத்தி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !