உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகள் பங்கேற்ற விதை நாள் விழா

விவசாயிகள் பங்கேற்ற விதை நாள் விழா

விவசாயிகள் பங்கேற்ற விதை நாள் விழாபுன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை நாள் விழா, ஆராய்ச்சி நிலைய தலைவர் சக்திவேல் தலைமையில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தரமான விதைகளை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மை, விதை உற்பத்தியின் போது கடைபிடிக்க வேண்டிய விதைச்சான்று நடவடிக்கை, புதிய பயிர் ரகங்களின் சிறப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நெல் விதை நேர்த்தி செய்முறை, பண்ணை இயந்திரங்களின் உபயோகம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை விதை மைய இயக்குனர் உமாராணி, விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ