கறுப்பு பேட்ஜ் அணிந்தரேஷன் கடை ஊழியர்
கறுப்பு பேட்ஜ் அணிந்தரேஷன் கடை ஊழியர்ஈரோடு:தமிழகத்தில் 'புளூ டூத்' மூலம் ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., (கை ரேகை பதிவு கருவி), எடை தராசை இணைக்கும் பணி நடக்கிறது. சிக்னல் பிரச்னை, ரேஷன் கார்டுதாரரை, 2 முறைக்கு மேல் கை ரேகை பதிவு செய்ய சொல்வதில் பிரச்னை எழுகிறது. இதனால் நேர விரயம் ஏற்படுகிறது. இதை மாற்றி ஒரு முறை கைரேகை வைத்தால் செயல்படும்படி மாற்ற வேண்டும்.நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து சரியான எடையளவுடன் பொருளை கடைக்கு அனுப்ப வேண்டும். மூட்டைக்கு, 50.650 கிலோ அரிசி இருக்க வேண்டும். எடை குறைவுக்கு அனைத்து அதிகாரிகளும் கூட்டு பொறுப்பு என நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கறுப்பு நிற கோரிக்கை அட்டை, கறுப்பு ஆடை அணிந்து, ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று பணி செய்தனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள், 860 பேர் கோரிக்கை அட்டை அணிந்து, கறுப்பு நிற ஆடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.