வேலை செய்த வீட்டில்திருடிய பெண் கைது
வேலை செய்த வீட்டில்திருடிய பெண் கைதுஈரோடு:ஈரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம், 55; இவரின் வீட்டில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த அன்வர் பாஷா மனைவி ஜாஸ்மின், 36, வேலை செய்து வந்தார். கடந்த, ௩ம் தேதி பீரோவில் வைத்திருந்த, ௩௬ பவுன் நகையை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். இதுகுறித்த புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வந்தனர். ஜாஸ்மினை நேற்று கைது செய்த போலீசார், 20 பவுன் நகையை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.