மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
03-Mar-2025
சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்புசென்னிமலை:பங்குனி அமாவாசை தினமான நேற்று, சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.காலை முதலே பக்தர்கள் படிகள் வழியாக சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். காலை, 11:00 மணிக்கு சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில் சுவாமி புறப்பாடு நடந்தது. முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி. சென்னிமலை டவுன் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
03-Mar-2025