மேலும் செய்திகள்
கார் மோதி மான் பலி
03-Mar-2025
குட்டையில் மூழ்கி சிறுவன் பலிபவானி: அம்மாபேட்டை அடுத்துள்ள இந்திரா நகர், கோணமூப்பனுாரை சேர்ந்த பிரவேஷ், 12, வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறையாக இருந்ததால், வீட்டிலிருந்த பிரவேஷ் நேற்று மதியம், பூனாட்சி - வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில், ஐயனாரப்பன் கோவில் எதிரே உள்ள குட்டையில், நண்பர்களுடன் குளிக்க வந்த போது, தண்ணீரில் மூழ்கியுள்ளார். மற்றொரு சிறுவன் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, தண்ணீரில் இருந்த பிரவேஷை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே பிரவேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
03-Mar-2025