உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைது

பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைது

பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைதுஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து அறச்சலுாருக்கு, 21ம் நெம்பர் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அறச்சலுாரில் இருந்து ஈரோட்டுக்கு வந்தது. அறச்சலுார், முகாசி அனுமன்பள்ளியை சேர்ந்த டிரைவர் குமார், 37, ஓட்டினார். ஈரோடு காளைமாட்டு சிலை அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே மது போதையில் வந்த இருவர், பஸ்சை வழிமறித்தனர். டிரைவர் குமாரை தகாத வார்த்தை பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதை பயணிகள் கண்டித்ததால், ஆத்திரமடைந்த இருவரும் பெரியவலசை சேர்ந்த வள்ளி நாராயணன், 70, என்ற பயணியை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். டிரைவர் குமார் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர். ஈரோடு, புதுமைக்காலனியை சேர்ந்த வினோத், 26; ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலக பின்புற பகுதியை சேர்ந்த ஸ்ரீதரனை, 22, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ