உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்

எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்

எம்.பி.,க்கள் முன்னிலையில்கண்காணிப்பு குழு கூட்டம்ஈரோடு,ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் மற்றும் ஈரோடு எம்.பி., பிரகாஷ் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.இக்குழுவின் நோக்கம், அரசின் திட்டம், நிதி மக்களை சென்றடைவதை உறுதி செய்தல், அப்பணிகளை விரைவுபடுத்துதல் குறித்து விவாதித்தனர். கடந்த டிச.,27ல் நடந்த கூட்ட நடவடிக்கை, அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். நுாறு நாள் வேலை திட்டத்தில் வட்டார வாரியாக பதிவு செய்தோர், பணி வழங்கப்பட்ட நாள், மாநகராட்சியில் நடந்து வரும் பணி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், எஸ்.பி., சுஜாதா, ஈரோடு கோட்ட வணிக வரி இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், துணை இயக்குனர் (சத்தி புலிகள் காப்பகம்) குலால் யோகேஷ் விலாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை