மேலும் செய்திகள்
மொபட் திருடிய வாலிபர் கைது
08-Aug-2024
வாலிபரை மிரட்டிய 2 பேர் கைது ஈரோடு, ஆக. 25-ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சபரி கிரீசன், 23; ஈரோடு ஜான்சி நகரில் நடந்து சென்றபோது, சந்திர பிரகாஷ், கார்த்தி, அரவிந்த் ஆகியோர், முன் விரோதம் காரணமாக அவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது சந்திர பிரகாஷ் தகாத வார்த்தை பேசி, கத்தியால் சபரிகிரீசன் இடதுபக்க தலையில் கிழித்தார். மற்ற இருவரும் கைகளால் தாக்கியுள்ளனர். சபரி கிரீசன் கூச்சல் போடவே மக்கள் ஓடி வந்தனர். இதனால் மூவரும் கொலை மிரட்டல் விடுத்து ஓட்டம் பிடித்தனர். அவர் அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம், அசோகபுரம், தேவனாங்காடு சந்திரபிரகாஷ், 26; பெரியசேமூர், மாரியம்மன் கோவில் வீதி கார்த்தி, 24, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
08-Aug-2024