உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்சென்னிமலை, செப். 18-சென்னிமலை, முருகன் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் தேதி, பவுர்ணமி, செவ்வாய் கிழமை என மூன்று முக்கிய நிகழ்வுகளால், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பாக போற்றப்படுகிறது. மேலும் நேற்று செவ்வாய் கிழமையும் வந்ததால் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் செய்து வேண்டுதல் வைப்பர்.சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை 5:00 மணி முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. கோபூஜை, அபிேஷகத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மாலை வரை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து, கும்பல் கும்பலாக வேன்கள் மூலம் வந்த பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது. பொது தரிசனத்தில் பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி