பட்டப்பகலில் மண் கடத்திய டிப்பர், ஜே.சி.பி., பறிமுதல்
பவானி: எண்ணமங்கலத்தை அடுத்த கோவிலுார் பூஞ்-சோலை தோட்டத்தில், சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக, மண்டல துணை தாசில்தார் பெரி-யசாமி, எண்ணமங்கலம் வி.ஏ.ஓ., சதீஷ்குமா-ருக்கு நேற்று தகவல் கிடைத்தது.வி.ஏ.ஓ., சென்றபோது ஜே.சி.பி., உதவியுடன், டிப்பர் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். அவரை பார்த்ததும் அந்தியூர், புதுமேட்டூரை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மாதேஷ், நகலுாரை ஜே.சி.பி., ஆப்பரேட்டர் விஜயகுமார் தப்பியோ-டினர்.லாரி, ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்து, வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.