உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விநாயகர் சதுர்த்தி விழா போலீஸ் அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தி விழா போலீஸ் அணிவகுப்பு

ஈரோடு: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோவில், வீடு, பொது இடங்களில் விநா-யகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யும் வகையில் முன்னேற்-பாடு நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில், 1,008 இடங்-களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்து வரு-கின்றனர். தவிர பல்வேறு அமைப்புகள் சார்பிலும், கிராமங்கள், சில கோவில்கள் மூலமும் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளனர்.மாவட்ட அளவில், 1,751 இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். பெரும்பாலான இடங்-களில் நேற்றிரவே சிலைகள் வைத்து, பூஜைகளை தொடங்கி விட்டனர். ஈரோடு சம்பத் நகரில், 11 அடி உயர பிரமாண்ட சக்தி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வரும், 10ல் ஈரோட்டில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்-பட உள்ளது.இதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஈரோடு சம்பத் நகரில் துவங்கிய போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நசி-யனுார் சாலை, இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி., சாலை வழியாக காவிரி சாலையில் நிறைவடைந்-தது.ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் இன்ஸ்-பெக்டர்கள் விஜயன், வைரம், கோமதி, செந்தில்பிரபு, சரவணன் உட்பட போலீசார், அதிரடிப்படையினர், ஆயுதப்படையினர் பங்-கேற்றனர்.இதேபோல் புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் பாதையில், கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. சத்தி டி.எஸ்.பி., சரவணன் துவக்கி வைத்தார்.இன்ஸ்பெக்டர்கள் சுப்புரத்தினம், செல்வராஜ், அன்னம் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போக்குவரத்து போலீசார் என, 50க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.பஸ் ஸ்டாண்ட் முன் தொடங்கிய அணிவகுப்பு, விநாயகர் சிலை ஊர்வல பாதையான கோவை- சத்தி சாலை, பவானிசாகர் சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் நிறைவடைந்தது.* பவானியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில், டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையில் அணி-வகுப்பு ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் முருகையன், ரவி, ஜெயமுருகன், செந்தில்குமார், டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், கஸ்துாரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.* கோபி சப்-டிவிஷன் போலீஸ் சார்பில், பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஊர்வலம் கோபியில் நடந்தது. கோபி டி.எஸ்.பி., சீனிவாசன் துவக்கி வைத்தார்.இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செந்தில்குமார், ரவி, நாகமணி உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார், கோபி சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, வாய்க்கால் ரோடு வரை சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை